விளையாட்டு

கிரிக்கெட் வாழ்வுக்கு ஓய்வினை அறிவித்தார் லசித் மாலிங்க.

சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.

லசித் மாலிங்கவின் உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்த விடயத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் கிரிக்கெட்டுக்கு ஆதரவு வழங்கும் வகையில் எப்பொழுதும் உங்களுடன் நான் இருப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

17 வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய அவர் முன்னதாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

பின்னர், இருபது20 ப்ரீமியர் லீக் போட்டிகளில் பல்வேறு அணிகளின் சார்பில் விளையாடியிருந்தார்.

இந்நிலையில்,தற்போது சகல விதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவர் இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

Related Articles

Back to top button