செய்திகள்

கொழும்பு- கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ..

திடங்கொண்டு முன்செல்ல வழிகாட்டும் குமரா
உன் வீரவேல் துணையெமக்கு என்றுமே ஐயா
கரங்கள் பன்னிரண்டு கொண்டு அரவணைக்கும் குமரா
நம்பித்தொழும் எங்களுக்கு துணையிருப்பாய் ஐயா
கொழும்பு மாநகரில் கோயில் கொண்ட குமரா
நல்லருளை வழங்கியெம்மை வாழவைப்பாய் ஐயா
தேவேந்திரன் திருமகளை மணந்தவனே குமரா
இந்நாட்டில் நல்லமைதி காத்திடுவாய் ஐயா 
கொம்பனித் தெருவினிலே இருந்தருளும் குமரா
வளம் நிறைந்த நல்வாழ்வை எமக்களிப்பாய் ஐயா 
வன்கொடுமை சிந்தனையை அழித்திடுவாய் குமரா
மனவமைதி நிலவிடவே அருளிடுவாய் ஐயா 
வள்ளியம்மை திருமகளை உடன் கொண்ட குமரா
வேண்டும் வரம் தந்தெம்மை உயர்த்திடுவாய் ஐயா 
துன்பங்கள், துயரங்கள் துடைத்தெறிவாய் குமரா
தூய வள வாழ்விற்குத் துணையிருப்பாய் ஐயா 
தேரேறிப் பவனிவரும் திருமகனே குமரா
தெளிந்த நல்ல மனவுறுதி எமக்களிப்பாய் ஐயா 
சத்தியம் தளைத்திடவே உறுதி செய்வாய் குமரா
சமரசம் நிலைத்திடவும் வழிவகுப்பாய் ஐயா 
வேலவனே, வினை தீர்க்கும் திருக்குமரா
வேதனைகள் நெருங்காத நிம்மதியைத் தருவாய் ஐயா
திடங்கொண்டு எதிர் கொள்ளும் ஆற்றலைத்தா குமரா
வீறுகொண்டு நாமுயர உடன் வருவாய் நீ ஐயா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button