சினிமா

வெளியானது அன்பில் அவர்கள்!

கனவாகி கலைந்தாய், திசையறிந்து மற்றும் இறவாள் ஆகிய படைப்புகளைத் தந்த ரொனி புரொடக்ஸனின் நான்காவது படைப்பாக வெளிவந்துள்ளது ”அன்பில் அவர்கள்”

ஒரே கருப்பொருளைக் கொண்டு மூன்று பகுதிகளாக (3 காதல் கதைகள், 3 அத்தியாயங்கள்) யூடியுப் தளத்தில் வெளியாகியுள்ளது “அன்பில் அவர்கள்.“

மூன்று கதைகளையும், மணிவண்ணன், கமல் மற்றும் நஸ்மினா ஆகிய மூன்று கதாசிரியர்கள் எழுதியுள்ளனர்.

3 அத்தியாயங்களுக்கு 3 இசையமைப்பாளர்கள் என்ற அடிப்படையில், ஷான், கென்னி மற்றும் யஜீவன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

படத்தொகுப்பு, திரைக்கதை, இயக்கம் மற்றும் தயாரிப்பு என கப்பலின் ”கெப்டனாக” பணியாற்றியுள்ளார் ரொனி.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியான கனவாகி கலைந்தாய் குறும்படம் யூடியூபில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, திசையறிந்தும் மக்கள் மத்தியில் பேசப்பட்ட ஒரு படைப்பாக மாறியது.

இந்த படைப்புகள் தந்த நல்ல பெறுபேறு மற்றும் ஊக்கத்தின் அடிப்படையில் தன்னுடைய நான்காவது படைப்பாக அன்பில் அவர்களை இயக்கியுள்ளார் ரொனி.

Rony Dreams யூடியூப் தளத்தில் மூன்று பகுதிகளையும் இப்போது பார்வையிட முடியும்.

காணொளிகள்.. 👇

Part – 1
Part – 2
Part – 3

Related Articles

Back to top button