மத்திய மாகாணம் – நுவரேலியா மாவட்டம் – கொட்டகலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்
காலமெல்லாம் உடனிருந்து காத்தருளும் தாயே
கவலைகளைப் போக்கியெம்மை காத்தருள வருவாய்
என்றும் உடனிருந்து உறுதுணையாய் இருப்பாய்
கொட்டகலை கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
நல்லருளைத் தந்தெம்மை நாளும் அருளுகின்ற தாயே
நோய் நொடிகள் இல்லாது காத்தருள வருவாய்
என்றும் எம்குறைகள் தீர்க்கவே அருள்வாய்
கொட்டகலை கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
வாழ நல்ல வழிகாட்டி எம்மை வழிநடத்தும் தாயே
வாழ்வின் இருள் போக்கியெம்மை காத்தருள வருவாய்
என்றும் அகத்திருந்து ஆறுதலைத் தருவாய்
கொட்டகலை கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
மாண்புமிகு வாழ்வு தந்து வாழவைக்கும் தாயே
வளமான எதிர்காலம் தந்தெம்மைக் காத்தருள வருவாய்
என்றும் மகிழ்வு தந்து எம்மை வளப்படுத்த வருவாய்
கொட்டகலை கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
துயர்போக்கி அன்பு செய்து அணைத்தருளும் தாயே
துன்பமில்லா நல்லாழ்வை அளித்தருள வருவாய்
என்றும் தளராத நிம்மதியைத் தருவாய்
கொட்டகலை கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
அருள் பொங்கும் நிறை வாழ்வைத் தந்தருளும் தாயே
அணையாத கருணையினை அளித்தருள வருவாய்
என்றும் குறைவில்லா அன்பினையே தருவாய்
கொட்டகலை கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.