News

கைவிடப்பட்டிருந்த 600க்கும் அதிகமான வீடுகளின் கட்டுமான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது – பாரத் அருள்சாமி

Posted on

டி சந்ரு

 

நாட்டில் ஏற்படுத்திருந்த அசாதாரண பொருளாதார சூழ்நிலை காரணமாக நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் பல வேலை திட்டங்கள் இடைநடுவே கைவிடப்பட்டிருந்தன. அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் துணிச்சலான வழிகாட்டலில் இன்று நாடு பொருளாதார மேல் கட்டமைப்புக்குள் வளர்ச்சி அடைந்து அடைந்து வருகின்ற நிலையில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலில் கைவிடப்பட்டிருந்த 600க்கும் அதிகமான வீடுகளின் கட்டுமான பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி  தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

30 மில்லியனுக்கும் அதிகமான வீடமைப்புக்கான அபிவிருத்தி திட்டங்கள் நிதியத்துடனூடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்பதாக இதன் கட்டுமான பணிகள் நிறைவடைய உள்ளதாகவும், மேலும் இந்திய அரசின் நிதி உதவியுடன்  இடம்பெறவுள்ள வீட்டு திட்டங்களையும் பெருந்தோட்டங்களில் உடன் ஆரம்பிக்க தேவையான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இலவச காலை உணவு வேலை திட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதயம் நாளொன்றிற்கு  21,000  குழந்தைகளுக்கு தோட்ட கூட்டுறவு  சங்கத்தின் ஊடாக சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் வழங்கி வருகிறது ஏறத்தாழ  2.8 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டின் மூலம் இத்திட்டம் நடைபெறுவதாக  தெரிவித்திருந்தார்.

அத்துடன் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள் அபிவிருத்தி செயல்திட்டமும் சுகாதார அமைச்சுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இதன் முதல் கட்டமாக மஸ்கெலியா சாமிமலை பகுதிகளிலும் கொத்மலை பகுதியிலும் முதற்கட்ட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் புதிய சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை உருவாக்குவதிலும் உணவுப் பாதுகாப்பு  மற்றும் விவசாய தொழில் முனைவோருக்கான விடயத்தை வேலை திட்டங்களையும் தான் முன்னெடுப்பதாக தெரிவித்ததுடன் இது தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாடுகளின் உதவி மற்றும் சர்வதேச ஸ்தாபனங்களின் உதவிகளைப் பெற்று  மலையகப் பகுதிகளில் பல நிலைபேண்தகு அபிவிருத்திகளை மேற்கொள்ள உள்ளதாகவும் பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Exit mobile version